இது பற்றி அரசாங்க செய்தி தொடர்பாளர் சாட்டேல் கூறுகையில், கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
வருகிற மே மாதம் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனறு சர்கோசி உத்தரவிட்டு இருக்கிறார். பர்தா பெண்களின் கண்ணியத்துக்கு பங்கம் விளைவிப்பதால் இந்த தடை கொண்டுவரப்படுகிறது என்றார் சாட்டேல்.

நமது கருத்துக்கு பதில் இவர்களுக்கும் இந்த வசனம் போதுமானது.. ...
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர்கள், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதில் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்கராத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24: 31)
(இதுபோல அல்குர்ஆன் 33:59) இந்த வசனமும் பெண்களை பர்தா அணிவதை கட்டாயப்படுத்த செல்கிறது. ஆனால் பிரான் அரசு இஸ்லாமிய கொள்ளைகளை புதைப்பதையே நோக்மாக கொண்டுள்ளது. இதன் விழைவை அறியாதவர்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவார்கள்.
No comments:
Post a Comment