ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Tuesday, April 27, 2010

எச்ஐவி, எய்ட்ஸ் பலி வாங்கும் நோயா? பணம் காய்க்கும் மரமா?

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் பெரும் தொகை எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்புக்கும், சிகிச்சைக்கும், அதற்கான விழிப்புணர்வுக்கும் செலவிடப்படுகிறது. இப்படி செலவிடப்படும் தொகை ஒரு கோடி, இரண்டு கோடியல்ல; நூற்றுக்கணக்கான கோடிகள். அத்தனையும் ஒழுங்காக செலவிடப்படுகிறதா? பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் கிடைக்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தான் அதிரவைப்பவை; அதிர்ச்சி ஏற்படுத்துபவை. எச்ஐவி, எய்ட்ஸ் என்பது கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும். அது பல பேருக்கு பணம் காய்க்கும் மரம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். எய்ட்ஸ் தடுப்பு பணி, விழிப்புணர்வு பிரசாரப் பணி, மருத்துவப் பணியில் நிறைய பேர் ஈடுபடுகின்றனர். இதை தொழிலாகவே பலத் தொண்டு நிறுவனங்கள் நினைக்கின்றன. இதற்கு டாக்டர்களும், அதிகாரிகளும் விலக்கல்ல. விளைவு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதில்லை. எச்ஐவி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட நாலு பேர் கிடைத்தால், அவர்களுக்கு நல்லது செய்வதை காட்டிலும், அவர்களால் பலன் அடைபவர்களே அதிகம். அதனால் பாதிக்கப்பட்டர்களுக்கு எங்கும் கிடைப்பது அலட்சியமும், புறக்கணிப்பும்தான்.


சமூக சேவை என்பது வருவாய்க்கான மேலாண்மை என்று அர்த்தமாகி விட்டது. நிதி உதவிகள் நிரந்தர வருவாயாக மாறிவிட்டன. இதற்கு எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் உதாரணங்களாக இருக்கின்றன.
எச்ஐவி கிருமி அனைவரின் உடலிலும் இருக்கிறது. அதன் தன்மை எதிர்மறையா(நெகட்டிவ்), நேர்மறையா(பாசிட்டிவ்) என்பதுதான் கேள்வி. இங்கு நேர்மறையாக இருந்தால் பிரச்னை. அதாவது எச்ஐவி பாசிட்டிவ். இந்த கிருமி தொற்று ஏற்பட்டவர்களை எச்ஐவி உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களால் மற்றவர்களை போன்று இயல்பான வாழ்க்கை வாழ முடியும். இவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. எனவே தங்களை நோயாளிகள் என்று அழைக்க கூடாது என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர். இவர்களுடன் பழகுவது, சாப்பிடுவது, ஒன்றாக இருப்பது போன்றவற்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இவர்களுடன் உடலுறவு கொள்வது, அவர்களின் ரத்தத்தை பயன்படுத்துவது, அவர்களுக்கு போட்ட ஊசியை மற்றவர்களுக்கு போடுவது தான் தீங்கு. எச்ஐவி கிருமி அதிகரிப்பால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. நோய் உடனடியாக தாக்கும். உடல் பலவீனமாகும். எச்ஐவி பாதிப்பு அதிகமான நிலையில், அதாவது முற்றிய நிலையைதான் எய்ட்ஸ் என்கிறார்கள். இது நோயின் கடைசிக் கட்டம்.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP