தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சுன்னத் ஜமாஅத்தினருக்குமிடையே இன்று (13-5-2010) சென்னை மண்ணடி கிரீன் பேலஸில் விவா ஒப்பந்தம் நடைபெறுகின்றது. இந்த விவாத ஒப்பந்தத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலீல் ரசுல், எம்.எஸ் சுலைமான் மற்றும் எம்.ஐ சுலைமான் ஆகியோர் பங்குபெறுகின்றனர். சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி தரப்பில் மூன்று நபர்கள் பங்கு பெறுகின்றனர்.
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ்வின் செவியுறுபவனாகவும், பார்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4-58)
நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள! (அல்குர்ஆன் 8-27)
இம்மார்க்கம் நாம் அனைவருக்கும் ஓர் அமானிதமாகும். அந்த அமானிதத்தை நாம் உரியவர்களுக்கு எத்திவைப்பது நமது கடடை. இவ்விசயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் என்றுமே சலைத்தவர்கள் அல்ல. மீண்டும் பகிரங்க அழைப்பு விடுத்து இரண்டாம் கட்ட விவாதத்தின் நுழைகிறது நமது ஜமாஅத். துஆ செய்யவும்... சத்தியம் வெற்றி பெற..
Thursday, May 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment