நபியே! முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்பட்டுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும். நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33-59)
முஸ்லிம் பெண் அமெரிக்க அழகியாக தேர்வு
“மிஸ் அமெரிக்கா 2010” அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடந்தது. இதில் ரீமாபாகி என்ற 24 வயது முஸ்லிம் பெண் அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லெபனான் நாட்டில் பிறந்த இவர் குழந்தையாக இருந்த போது தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறினார்.
தற்போது அமெரிக்காவில் மிசிகன் மாகாணத்தில் உள்ள டியர் போர்ன் நகரில் தங்கியுள்ளார். உடல்நலத்தை பேணி காப்பதற்கு குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவது அவசியம் என ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.
அதுதான் அவருக்கு மிஸ் அமெரிக்க அழகி பட்டத்தை பெற்றுத் தந்தது. மேலும் மத நம்பிக்கை குறித்து இவரிடம் மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தங்களது குடும்பத்தில் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் மத பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக கூறினார்.
இது ஒரு இனையதளத்தில் வெளியாக செய்தி...
குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தினால் உடல் நலத்தை காக்கலாம், என்ற இவரது பதில் இஸ்லாத்திற்கு எதிரானதே... இஸ்லாம் அதிக குழந்தைகளை ஈன்றெடுக்க செல்கிறது. அரை குறை ஆடைகளில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படும் இது போன்ற பெண்கள்.. இவ்வாரான தருதலைகளால் தான் இஸ்லாத்திற்கு கேட்டபெயரை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அல்லாஹ் இதற்கான கூலியை மறுமையில் பரிசாக வழங்குவான். இன்ஷா அல்லாஹ்.
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment