ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Tuesday, July 27, 2010

ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!

இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளை சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள்,கழகங்கள், லீகுகள். இது போன்ற சமுதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்பு சூழ் நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.

ஆனால் தற்பொழுது "சத்தியமே ஜெயம்"என்ற பெயரில் சமீப காலமாக ஒரு இயக்கம் சிங்கப்பூரை தலைமையகமாக கொண்டு
செயற்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள். இறைவனால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது.அல்லாஹ் எனக்கு விதியாகியுள்ளான் நான் குடிப்பதற்கு இறைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன் .. என இது போன்ற பதில்கள் தான் வருகிறது.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது எந்த ஒரு செயலும் இறைவன் நாடினால் தான் நடக்கும் அது போல்தான் இதுவும் என்றார் கொள்கை பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கப்பூரில் வசிக்கும் முத்துப்பேட்டையை சார்ந்தவர் ஆவர் இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன இவரை நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்களை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாறு அழைத்தார்.

அன்பார்ந்த அருமை நண்பர்களே ... நாம் இயக்கங்களால் பிரிந்து கிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ் ரசூல் சொல்லித்தராத மிகவும் கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரை சொல்லி ஊருக்குள்
வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும் பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளை சலவை செய்யப்பட்டு இந்த பாவத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

இவ்வலையில் விழுந்த பல இளைஞர்கள் தங்களுக்கு சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இதனால் அவர்களை
நம்பி பல லட்சம் செலவு செய்து அங்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் கவலையில் இருந்து வருவதும் இவர்களின் பார்வையில் இதுவும் "விதி" தான் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர் போலும் இவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில்
SJ சிம்பல் போட்டுவைத்துள்ளனர் .

எனவே அன்பு நண்பர்களே... இதுபோன்ற ஷிர்க்கான
இயக்கங்களை ஊருக்குள் ஊடுருவ விடாமல் காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக ஆமீன் .


“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP