சில தினங்களுக்கு முன் நாம் அறிந்த செய்தி இது... ”பி.ஜெ. சவுதி அரேபியா வர தடை போட்டுள்ளது” என்ற செய்தி பரவலாக பரவிய நிலையில் பி.ஜெ. அவர்களின் தெளிவான பதிலுடன் தவ்ஹீத் ஜமாஅத் இணையத்தில் நாம் அனைவரும் பார்த்து அறிந்து கொண்டோம்... அப்பொழுது சவுதி அரசு பி.ஜெ.அவர்களின் நூல்களை வெளியிட்ட செய்தியும் இடம் பெற்றன்.. இது பழைய செய்தி.... ஆனால் அதன் பிறகும் இன்று 6-8-2010 அன்று தமாம் மண்டலத்தில் இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தின் (ITC தமிழ் பிரிவு) சார்பாக நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டில் சில இஸ்லாமிய புத்தகங்கள் விற்கப்பட்டன. அதில் பி.ஜெ. அவர்களின் நூலான ”குர்ஆன் கூறும் ஒரிறைக் கொள்கை” என்ற புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால்..

இஸ்லாமிய வழிகாட்டல் மையம் (ITC) இது சவுதி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தாவா குழு ஆகும்.. இங்கு எந்த நூல்களும் தன்னிச்சையாக விற்கவே இலவசமாக கொடுக்கவே முடியாது... பி.ஜெ. அவர்கள் முன்பு வெளியிட்ட பதிலுக்கு இது மேலும் வலு சேர்க்கிறது.. மாஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment