பழங்காலத்தில் இந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் அதனால் தான் பாபர் மசூதியை இடித்ததாகவும் இந்து அமைப்புகள் கூறி வந்தன.

அந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டவேண்டும் என்று முஸ்லிம்களும், ராமர் கோவில் கட்டவேண்டும் என்று இந்துக்களும் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரச்சினைக்குரிய இந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது.
அடுத்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சினைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று கோர்ட்டு அறிவித்தாலும் எதிர்தரப்பினர் உடனே போராட்டத்தில் குதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அயோத்தி உள்பட உத்தரபிரதேசத்தில் பல இடங்களிலும் நாட்டில் பல்வேறு இடங்களிலும் கலவரம் ஏற்பட்டது. இதேபோல தீர்ப்பு வரும் போது கலவரம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உத்தரபிரதேசத்தில் இப்போதே பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க உத்தரபிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளை இப்போதே செய்ய தொடங்கி உள்ளது. அயோத்தி, கான்பூர், வாரணாசி, பிரெய்லி, மொராதாபாத், மீரட், மதுரா ஆகிய இடங்கள் பதட்டம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே இங்கு பாதுகாப்பை பலப்படுத்த உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக 50 ஆயிரம் மத்திய போலீசாரை அனுப்பும்படி உத்தரபிரதேச அரசு கேட்டுள்ளது. அவர்கள் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கிடையே விசுவ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோவிலை கட்டுவது தொடர்பாக மீண்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. பாரதீய ஜனதா மூத்த தலைவர் வினய் கத்தியார் கூறும்போது, இந்துக்கள் உணர்வு விஷயத்தில் கோர்ட்டு தலையிட்டு எந்த தீர்ப்பும் சொல்ல முடியாது.
கோர்ட்டு என்ன தீர்ப்பு சொன்னாலும் சரி அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு எங்கள் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபடுவோம் என்றார். அயோத்தியை சேர்ந்த ஹசீம் அன்சாரி என்ற முதியவர் கூறும்போது, இந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமா? முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது பிரச்சினை இல்லை இது ஒரு புனிதமான இடம். அரசியல்வாதிகள் இதில் இருந்து விலகி இருந்தாலே எந்த பிரச்சினையும் வராது என்றார். நரேந்திர சர்மா என்ற ஆசிரியர் கூறும்போது, அயோத்தியில் முன்பு போல மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட அயோத்தி மக்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்
No comments:
Post a Comment