ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Wednesday, October 6, 2010

பாபர் மஸ்ஜித் இடிப்பு: ஒரு கிரிமினல் குற்றம் (காங்கிரஸ், சிபிஎம்) கண்டனம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றவர்கள்... எல்லம்... தற்போது பாபர் பள்ளியை இடித்தவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவருகின்றனர்...

பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக, பஜ்ரங் தள் தொண்டர்களால் இடிக்கப்பட்டது.

இதையடுத்து அத்வானி உள்பட பல்வேறு தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சு குப்தாவின் சாட்சியம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானியுடன் இருந்த அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் அளித்துள்ள சாட்சியத்தில், அத்வானி மற்றும் மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மசூதியை இடிக்க தூண்டிவிடும் வகையில் பேசியதாக கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் குலாப் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பதவி காலியாக உள்ளது.

இதனால் இந்த மசூதி இடிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துளளது.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் அயோத்தி நிலப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் முயற்சியை வரவேற்பதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் முயற்சியை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாபர் மசூதி இடிப்பை தீர்ப்பு மன்னிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்துக்குப்பின் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, மிகவும் அவமானகரமான, கிரிமினல் குற்ற நடவடிக்கையான பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாகவுள்ளது என்றார்.

தீர்ப்பு ஆபத்தான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்-சிபிஎம்:

இதற்கிடையே அயோத்தி வழக்கில் நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்ட தீர்ப்பு, ஆபத்தான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதற்கு ஒரே தீர்வு நீதித்துறைதான். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு அப்பீல் செய்யப்படும்போது, விசாரணைக்கு பின் அளிக்கப்படும் தீர்ப்பே நிரந்தர தீர்வு.

1992ம் ஆண்டு டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் ஒரு கிரிமினல் குற்றம். அது சிறுபான்மையினர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இதுபற்றியும், நீதித்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP