ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Monday, October 4, 2010

முஸ்லீம்களுக்கு எதிரான கருத்து: நெதர்லாந்து எம்.பி.,யிடம் நீதிமன்றம் விசாரணை

ஆம்ஸ்டர்டேம், அக்.3- நெதர்லாந்து எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் முஸ்லீம்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் குறித்து ஆம்ஸ்டர்டேம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டால் அவருக்கு அந்நாட்டுச் சட்டப்படி அதிகபட்சம் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். அவரது சுதந்திரக் கட்சி நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"டி வொல்ஸ்கிரான்ட்" என்னும் நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில், "இந்த நாட்டில் ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ளனர். இனி ஒரு முஸ்லீமை கூட இந்த நாட்டில் அனுமதிக்கக் கூடாது. மேலும், நெதர்லாந்தில் குரானை தடை செய்ய வேண்டும்." என்று எழுதியிருந்தார்.
2008-ம் ஆண்டில் "ஃபிட்னா" என்ற பெயரில் இவர் வெளியிட்ட குறும்படத்தில் இடம்பெற்ற தற்கொலைப்படைத் தாக்குதல் காட்சிகளுக்கு குரான் வசனங்களை பயன்படுத்தியிருந்தார்.
கீர்ட் வில்டர்ஸ் இன்று நீதிமன்றம் வந்தபோது, அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தார். இதனிடையே, அவருக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அங்கு கலவரத் தடுப்புப் போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.
நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், "பொது விவாதத்திற்காக எனது கருத்தை நான் தொடர்ந்து வெளியிடுவேன். நான் உண்மையை பேசியதால் சந்தேகத்திற்குரிய நபராக இங்கு அமர்ந்துள்ளேன்." என்றார்.
பின்னர் நீதிபதிகளின் கேள்விகளுக்கு கீர்ட் வில்டர்ஸ் மவுனமாகவே இருந்தார் என்று அவரது வழக்கறிஞர் பிராம் மோஸ்கோவிகஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை நீதிபதி மூர்ஸ் விசாரித்து வருகிறார். நவம்பர் 4-ம் தேதி தீர்ப்பு கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டிவிட்டர் இணையதளத்தில், இன்றைய விசாரணைக்கு தான் நேரில் ஆஜராவது குறித்து "கொடூரமான நாள்" என்று வில்டர்ஸ் எழுதியுள்ளார்.
பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதால் கீர்ட் வில்டர்ஸுக்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி : தினமணி

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP