அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆசியாவின் தவிர்க்க முடியாத நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது. இரட்டை தொழில்நுட்ப உபகரணங்களின் மீதான ஏற்றுமதி தடை நீக்கம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கடினம். இந்திய ஜனநாயக முறையில் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அணு சக்தி உற்பத்திக்கு தேவைப்படும் எல்லாவற்றையும் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலிருந்து இந்தியா பெற்றுக் கொள்ளலாம். அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதா தொடர்பான எங்கள் நிலை குறித்து இந்திய அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இப்பிரச்னை குறித்து இருநாடுகளும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறியிருக்கிறார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அனைத்து நாடுகளும் ஆதரவு தரும் நிலையில், அமெரிக்காவின் இந்த தயக்கம் பெரும் சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது.
இவர்கள் இந்தியாவின் அத்துனை வளங்களையும் சுரண்டிக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அணு ஆயுதத்தை இந்தியாவில் தடை செய்துவிட்டு, தாங்கள் நாடு மட்டும் தான் உலக வல்லரசாக ஆதிக்க வாதியாக நிகழவேண்டும் என்ற எண்ணத்திலும், இந்திய உலக வல்லரசாக மாறும் நிலையில் அது அமெரிக்காவுக்கு இடைஞ்சலாக அமையும் என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இவர் இந்தியா வருவதன் மூலம் மிச்சமிருக்கும் வளங்களையும் சுரண்டி செல்ல தான் திட்டமிட்டிருப்பாரே என்று நினைக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ்... வளரும்...
Thursday, November 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment