Saturday, November 6, 2010
ஆன்லைனில் படங்களை போட்டு ஆழம் தெரியாமல் காலை விடும் இளசுகள் - உஷார் ப்ளீஸ்
சமூக வலைத்தளங்களையும் இணையத்தையும் ஆக்கபூர்வமின்றி அளவிற்கதிகமாக பயன்படுத்தி படங்களை வெளிப்படையாக அதில் போட்டு வரும் இளசுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவையெல்லாம் சிறுவர்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கைகளில் மாட்டிக் கொண்டு எதிர்காலமே கேள்விக்குறியாகும் அபாயங்கள் அதிகமாக உள்ளது என்ற விழிப்புணர்ச்சியின்றி பல சிறுவர்கள் செயல்படுவதும் தெரிய வந்துள்ளது.
இளசுகள் தங்களைத் தாங்களாகவே பல விதங்களில் தவறாக படம் எடுத்துக் கொண்டு அவற்றை இணையதளங்களின் வாயிலாக தங்கள் காதலர்களுக்கு காட்டுவதற்காக வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் உண்டாகப் போகும் விளைவுகளை இளைய சமுதாயம் அறிந்திருக்கவில்லை என சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோ ஹில்டன் தெரிவித்துள்ளார்.
எதிர்கால வேலை வாய்ப்பின் போதும், செக்ஸ் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர்களின் கையிலும் இந்த படங்கள் கிடைக்குமானால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கப் போவது உறுதி என்பதை அவர் மேலும் கூறியுள்ளார். இந்த குறைகளைக் களைய சிறுவர்களுக்கு இது தொடர்பான கல்வியளிப்பது ஒன்றே வழி எனவும் அவர் பிரிட்டன் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்
Labels:
சிறப்பு செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment