
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம்ஜென்ம பூமி & பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில், 24ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு எப்படி இருந்தாலும், ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், உ.பி. முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள் ளது.
இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிட நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் (என்.பி.ஏ.) சில விதிமுறை களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து என்.பி.ஏ. நேற்று வெளியிட்ட விதிமுறைகள் வருமாறு:
* நாட்டின் மதச்சார்பின்மை பாதிக்காத வகையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு செய்தியை வெளியிட வேண்டும். பல்வேறு மதம், மொழி, இனம் நிறைந்த நமது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செய்திகளோ, காட்சிகளோ வெளியிட வேண்டாம்.
* அயோத்தி இடம் தொடர்பான வழக்கில், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே யூகச் செய்திகளை வெளியிட வேண்டாம்.
* கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப கூடாது.
* தீர்ப்புக்கு பின்னர் எதிர்ப்பு போராட்டங்கள் அல்லது மகிழ்ச்சியில் கொண்டாட்டங்கள் நடந்தால் அவற்றையும் ஒளிபரப்பக் கூடாது.
* சரியான தகவல்களை மட்டும் நன்கு உறுதி செய்து வெளியிட வேண்டும்.
* எந்த ஒரு பிரிவினரையும் தூண்டும் வகையில் செய்திகள், காட்சிகளை வெளியிட வேண்டாம்.
இந்த விதிமுறைகளை உறுதியாக கடைப்பிடித்து நாட்டின் மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு என்.பி.ஏ. கூறியுள்ளது.
No comments:
Post a Comment