ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Sunday, September 12, 2010

ஷவ்வால் மாதத்தின் 6 நோன்பை, ரமளானை தொடர்ந்துள்ள 6 நாளில் தான் வைக்க வேண்டுமா?

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சா (ரலி), நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ”தொடர்ந்து” என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

தொடர்வது என்பதற்கு ”அத்பஅஹு” என்ற அரபுச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு ”முததாபிஐன்” என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும்.

உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

அல்குர்ஆன் 58 : 4

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு ”முததாபிஐன்” என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப் பட்டிருந்தால் ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு கூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறு நாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப் படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP