காஞ்சிபுரம்: அயோத்தி தீர்ப்பு குறித்து யாரும் பதட்டமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்று கூறியுள்ளார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராமர் கோயில் தீர்ப்பு குறித்து யாரும் பதற்றம் அடையாமல் அமைதியான முறையில் இறைவழிபாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும்.
தீர்ப்பு குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை. அனைவரும் அமைதியான முறையில் இருக்க வேண்டும். ராமரை ஜபம் செய்யுங்கள், ராமராஜ்ஜியம், தர்ம ராஜ்ஜியம் இந்த நாட்டில் நடக்கும். பிரார்த்தனை செய்யுங்கள், பிரார்த்தனையின் வலிமை எல்லா காரியத்திலும் வெற்றியைக் கொடுக்கும் என்று கூறினார் ஜெயேந்திரர்.
Monday, September 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment