ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Monday, September 27, 2010

உணர்வு இதழை குறைகூறிய ஜாக். பதில் அளித்த உணர்வு

அன்புள்ள சகோதரர்களுக்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ஜாக் அமைப்பின் மற்றும் ஒரு இனையதளமான jaqh.org என்ற தளத்தில் உணர்வு பொய்யான செய்தியை வெளியிட்டதாக வந்த ஒரு செய்தியை பார்த்த நாம்... அந்த செய்தி நாம்..

to : unarvu@rediffmail.com,
: tntjhq@gmail.com
date Sat, Sep 25, 2010 at 5:33 AM
subject கேள்வி
mailed-by gmail.com

hide details Sep 25 (2 days ago)


அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்...)

ஜாக் தங்களை பற்றி தவறாக குறியதாக செய்திகள் ஜாக்.ஆர்க் தளத்தில் வெளியிட்டுள்ளது.. இது குறித்து தக்க ஆதாரத்தை வெளியிடவும்..


ஜாக்....தளம் செய்தி

தரமான, உண்மையான செய்திகளை நாகரீகமான முறையில் மக்களுக்கு வழங்கி அவர்களை விழிப்படையச் செய்வதுதான் பத்திரிகை தர்மம் என்பார்கள். ஆனால் உணர்வு ஏடு இந்த தர்மத்தை மீறுவது வாடிக்கையாகி விட்டது.

முன்பு ஒரு முறை 'விடுதலைப் புலிகளை ஆதரிப்பாதாக' நமது JAQH அமைப்பின் மீது அவதூறு செய்தி பரப்பி வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதென்று இப்போது மீண்டும் அதே பாணியில் ஒரு அவதூறு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொள்ள முனைந்துள்ளது.

பிற அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மீது கண்ணை மூடிக் கொண்டு களங்கம் சுமத்துவதும், சேற்றை வாரி இறைப்பதும் உலகம் காக்க வந்த (!) இந்த உலக மகா உத்தமர்களுக்கு கை வந்தக் கலையாகி விட்டது.

'நாடும் நடப்பும்' என்ற பெயரில் 6 வது பக்கத்தில் அது வெளியிட்டுள்ள செய்தியில் நமது JAQH அமைப்பை தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தி வலிய வம்புக்கு இழுத்துள்ளது.

நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசல் JAQH நிர்வாகத்தின் கீழுள்ளது அல்ல என்பதை நன்கு தெரிந்திரிந்தும் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாகும். தங்களின் ஆதரவாளர்கள் தவிர மற்ற அனைத்து தாயிகளும் இந்த பள்ளிவாசலில் ஜும்ஆ குத்பாவுக்காக போய் வருகிறார்கள். இவர்களுக்கு மட்டும் இங்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்த ஆத்திரத்தைத்தான் வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துள்ளனர்.

மேலும் இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததும் JAQH நிர்வாகம் அல்ல. குமரி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு JAQH பேச்சாளர்கள் யாரும் அழைக்கப்படவுமில்லை, கலந்து கொள்ளவுமில்லை.

உண்மை இவ்வாறிருக்க, வேண்டுமென்றே நமது அமைப்பை இதில் சம்பந்தப் படுத்தி வம்புக்கு இழுத்திருப்பது உணர்வு ஏட்டின் வாய்மை மற்றும் நேர்மையற்ற நிலைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 'அம்மா' வை எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமென்ற தாய்ப் பாசத்துடன் (?) கட்சித் தொண்டர்களையும் மிஞ்சும் அளவிற்கு ஊர் ஊராக, தெருத் தெருவாக மைக் பிடித்து களமிறங்கி தேர்தல் பணியாற்றிய இவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் வாதிகள் கலந்து கொண்டதை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது?

அது சரி...! திருவாரூர் கொலைச் சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று சொன்னால் இதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவ்வாறாயின் அதே அச்சமும் எச்சரிக்கை உணர்வும் கொஞ்சமாவது மற்றவர்கள் விஷயத்திலும் இருக்க வேண்டாமா?

காதுக்கு வந்த செய்திகளையெல்லாம் ஊர்ஜிதம் செய்யாமல் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையில் குற்றம் என்பது இவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது?

"கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் வெளியிடுவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும்" என்பது நபி மொழியாகும் (முஸ்லிம்)

"ஈமான் கொண்டவர்களே தீயவன் ஒருவன் உங்களிடம் செய்தி கொண்டு வந்தால் அதை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்", (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்துக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம், பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே வருத்தப்படுவீர்கள்" (அல் குர்ஆன் - 49:6)

எனவே காதுக்கு வந்தவற்றையேல்லாம் செய்தியாக்கி காசு பண்ணுவதை விட்டு விட்டு உணர்வு ஏடு பத்திரிக்கை தர்மத்தை மீறாமல் பார்த்துக் கொள்வது நல்லது என்று சொல்லி வைக்கிறோம்

---------மேற்க்கண்ட செய்தியை நாம் இ-மெயில் மூலமாக 25-09-2010 அன்று அனுப்பிவைத்தோம்..........

இதற்கு பதில் அளிக்கும் விதமாக உணர்வு செய்தியளர் மாஹீன் அவர்கள் onlinepj.com-ல் ஜாக் அமைப்பிற்கு பதில் அளித்துள்ளார்...


மேற்க்கண்ட செய்தி 26.09.2010 அன்று வெளிவந்துள்ளது....


இன்ஷா அல்லாஹ்... தொடரும்....

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP