பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தில் நாளை வெளியாகும் தீர்ப்புக்குப் பின்னர் கூட சமரசத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் கூறியுள்ளது.
இந்த வாரியத்தின் உறுப்பினரான கமால் பரூக்கி நிருபர்களிடம் கூறுகையில்,
நாளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை அளிக்கும் தீர்ப்புக்குப் பின்னரோ அல்லது அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி்ல் தாக்கலாகும் மனு மீதான தீ்ர்ப்புக்குப் பின்னரும் கூட அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வு காண வாய்ப்புள்ளது. அந்த முயற்சிகளையும் நாங்கள் கைவிட மாட்டோம் என்றார்.
இதன்மூலம் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முஸ்லீம் சட்ட வாரியம் இன்னும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு லக்னெள நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. இது யாருக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து லக்னெள நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
"நான் கொடுத்தனுப்பப்பட்டதை உங்களில் ஒரு சாரார் நம்பி, மற்றொரு சாரார் நம்பாமல் இருந்தால் அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருங்கள்! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்” (எனவும் அவர் கூறினார்.) (அல்குர்ஆன் 7-87)
Wednesday, September 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment