பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தீர்பை வரும் 28ம் தேதி வரை உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில், தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வந்தால் கடும் எதிர்விளைவுகள் இருக்கும். அந்த இடத்தில் கோவிலைத் தவிர வேறு எந்த மதவழிபாட்டுத் தலமும் கட்டப்படக் கூடாது என மதவெறியிடித்தாடும் இந்து மத வெறி அமைப்புகள் அறிக்கைவிட்டுள்ளன.
அங்கு கோவிலைக் கட்ட ஜனநாயகரீதியில் இந்து சமூகம் தயாராக வேண்டும். மசூதி கட்ட முயற்சி நடந்தால் அதை எல்லா சக்தியையும் கொண்டு எதிர்க்க வேண்டும் என்றும் நமது நாட்டின் ஜனனாயகத்தை குழிதோன்றி புதைத்துவிட்டது விஸ்வ இந்து பரிஷத்.
அரசியல் தலைவர்கள் சிலர்....
காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அது முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்தாதகவே அமையும்.
இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி, அங்கே இந்த கோயில்களை எழுப்பியுள்ளனர்.
(ராமர் குறித்தும், ராமயணம் குறித்தும் மிக சர்ச்சையான விஷயங்களைச் சொல்லி) ராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் வாஜ்பாய்,அத்வானி, ஜோஷி போன்றவர்கள் அனைவரையும் அரசு உடனே கைது செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா?.
அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகக் கூறுகிறார். எனவே இந்துத்துவ பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் மத வெறியர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்.
Saturday, September 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment