டெல்லி: அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்டுள்ள அப்பீல் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.
இந்த வழக்கை கடந்த 23ம் தேதி விசாரித்த 2 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், இரு வேறு கருத்துக்களைத் தெரிவித்து பின்னர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதன்படி இன்று இந்த மனு தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசும் ஒரு பிரதிவாதியாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இன்று மத்திய அரசின் கருத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், முஸ்லீம் வக்பு வாரியம் மற்றும் ராமஜென்மபூமி இயக்கம் ஆகியவை தத்தமது கருத்துக்களை உச்சநீதிமன்றத்தி்ல தாக்கல் செய்துள்ளன.
இந்த பின்னணியில் இன்று விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் என்ன தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது, அயோத்தி தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவிக்க தடை விதிக்கப்படுமா அல்லது தீர்ப்பை அளிக்கலாம் என உத்தரவிடப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Monday, September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment