லக்னோ: அயோத்திப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது இயலாத காரியம் என்று முஸ்லீம் வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பேச்சுவார்த்தை, சமரசம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என்று கூறியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக சன்னி வக்பு வாரியம் ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்துள்ளது. அதில்தான் இத்தனை காலமாக நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுவை நாளை தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுக்கவுள்ளது நினைவிருக்கலாம்.
பேச்சுவார்த்தை பலனைத் தராது என்று ஏற்கனவே ராம்ஜென்மபூமி அமைப்பும், இந்து அமைப்புகளும் கூறி விட்டன. இந்த நிலையில் தற்போது வக்பு வாரியமும் அதே பதிலைத் தந்துள்ளதால், நாளைய தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Monday, September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment