தம்பியை கொலை செய்த அண்ணன்-பெற்றோர்கள் இருவரையும் சமமாக கவனிக்காததால் அண்ணன் ஆத்திரம்!
உத்தரபிரதேச மாநிலம் முசாஃப்பர்நகர் என்ற நகரத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் தாரிக் அன்வர் என்ற 12 வயது சிறுவனை காணவில்லை. இந்நிலையில் தாரிக் அன்வரின் உடல் கூக்ரா என்ற கிராமத்தில் போலிசாரால் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த கொலைக்கு காரணமான முக்தார் என்ற 24 வயது வாலிபரும் அவரது கூட்டாளியும் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முக்தார் கொலை செய்யப்பட்ட தாரிக் அன்வரின் உடன் பிறந்த அண்ணன்!
முக்தார் போலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ”எனது பெற்றோர்கள் என்னை விட எனது தம்பியின் மீதே அதிக கவனம் செலுத்தினர். அதனால் தான் எனது தம்பியை நான் கொன்றேன் எனக் கூறி முசாஃப்பர்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு்ள்ளார்.
பெற்றோர்கள் குழந்தைகளை பராமரிக்கும் விஷயத்தில் ஏற்றத் தாழ்வு காண்பிக்க கூடாது அவ்வாறு காண்பிப்பது குழந்தைகளிடையே காழ்புணர்வுகளை ஏற்படுத்தும் அது கொலை செய்யும் அளிவிற்கு குழந்தைகளை கொண்டு சென்றுவிடும் என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது.
குழந்தைகள் விஷயத்தில் பின்வரும் நபிமொழியை இது போன்ற பெற்றோர்கள் கடைபிடித்திருந்தால் மெற்கண்ட சம்பம் நடந்திருக்க வாய்ப்பில்லை..
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ் வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பப்பை ரத்து செய்தார். புகாரி-2587
Saturday, October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment