அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
'வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்'', (அல்குர்ஆன் 67:16.)
''அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.'' (அல்குர்ஆன் 20:5).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள்.
அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?
''அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46)
அதாவது இறைவன் நாம் செய்பவைகளைப் பார்ப்பதின் மூலமும் நாம் சொல்பவைகளை கேட்பதின் மூலமும் நம்முடன் இருக்கிறான்.
அர்ஷ்
''ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! (அல்குர்ஆன் 23:86)
''அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.'' (அல்குர்ஆன் 2:255)
''அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.'' (அல்குர்ஆன் 69:17)
அல்லாஹ்வின் தோற்றம்
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.
''அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.'' (அல்குர்ஆன் 75:22,23)
''மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான். (அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரஆ) நூல் : புகாரீ (7439)
இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் : ''அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்''. (அல்குர்ஆன் 42:11)
அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?
இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது.
அல்லாஹ் கூறுகிறான் : ''அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்''. (அல்குர்ஆன் 6:103)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர் ரளியல்லாஹு அன்ஹு நூல் : முஸ்லிம் (261)
குறிப்பு : அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, அவன் ஒளியாளான உருவம் என்று நம்புவதன் மூலம் குர்ஆனையும், ஹதீஸையும் சரியாக புரிந்துகொள்ள முடியும்.
காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.
''அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.'' (அல்குர்ஆன் 83:15)
....வளரும் இன்ஷா அல்லாஹ்....
Sunday, October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment