சென்னை: சி.பி.எஸ்.இ. திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பினால் மத்திய கல்வி வாரியம் நடத்தும் தேர்வை எழுதலாம். இல்லையென்றால் பள்ளிகள் நடத்தும் தேர்வை எழுதலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய கல்வி வாரியம் பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள், 11-ம் வகுப்புக்குச செல்லும்போது வேறு கல்வி முறைக்கு(மெட்ரிகுலேஷன்) மாறலாம். சிலர் அதே முறையில் கல்வியைத் தொடரலாம்.
மாணவர்களின் வசதி கருதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பினால் மத்திய கல்வி வாரியம் நடத்தும் தேர்வை எழுதலாம். இல்லையென்றால் பள்ளிகள் நடத்தும் தேர்வை எழுதலாம். பள்ளிகள் நடத்தும் தேர்வுத் தாள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்யலாம்.
சி.பி.எஸ்.இ. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று தங்கள் பெயர்களை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
குறிப்பு : தமிழக அரசு நடத்தும் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இது கிடையாது எனிலும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள (Central Board)மத்திய அரசு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே. தமிழகத்தில் இப்பாடத்திட்டத்தை குறைந்த பள்ளிகளே பயன்படுத்துகின்றன.
Wednesday, November 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment