Wednesday, November 10, 2010
ஈரான், சிரியாவை தாக்க திட்டமிட்டிருந்தேன்: புஷ்..
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது ஈரான் மற்றும் சிரியா மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். புஷ், Ôடெசிஷன் பாய்ன்ட்ஸ்Õ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். 497 பக்கங்கள் கொண்ட இதில், புஷ் வாழ்க்கையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் மற்றும் அமெரிக்க அதிபராக இருந்தபோது நடைபெற்ற பல முக்கிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்கவில்லை.
எனவே, எனது ஆட்சி காலத்தில் அதன் அணு உலைகளை தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டேன். இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என ராணுவ அதிகாரிகள் கூறினர்.
இதனால் அமெரிக்காவுக்கு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்தனர். இதுகுறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன். எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை பயமுறுத்த ஈரானை அமெரிக்கா அனுமதிக்க கூடாது.
அடுத்தபடியாக, சிரியாவின் அணு உலைகளை அழிக்குமாறு அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இஸ்ரேல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2007ல் இஸ்ரேல் தன்னிச்சையாக சிரியா மீது தாக்குதல் தொடுத்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். புஷ் அதிபராக இருந்தபோது ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் நாடுகளை அணு ஆயுதம் என்ற பெயரில் இதுபோன்ற செயல்களை செய்யும் அமெரிக்காவில் செயலை கண்டிக்கிறோம். அத்துடன் அமெரிக்காவுக்கு தக்க பதில் அடி கொடுக்கும் நாடு இன்ஷாஅல்லாஹ் விரைவில் வரும்...
Labels:
உலக செய்தி,
சிறப்பு செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment