Monday, November 1, 2010
சென்னை இரத்த தான விருது வழங்கும் விழா: 46 கேடயங்களை பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம்
கடந்த 30-11-2010 ஆம் நாள் சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இரத்தப் பரிமாற்று மையம் சென்னை நகரத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை மாநகராட்சி குடும்பநலத்துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட் டுப்பாடு மையத்தின் திட்ட இயக்குனர்கள் அ. அமுதா மற்றும் பெ. அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த மூன்று ஆண்டுகளாக இரத்ததானம் செய்யும் தன்னார்வ அமைப்புகளில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரு கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த ஆண்டு சென்னை நகரில் மட்டும் 3100 யூனிட் இரத்த தானம் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அல்ஹம் துலில்லாஹ்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்ஆர்வ சேவையைப் பாராட்டி அதற்கான விருதினை மாநிலச் செயலாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்களிடம் வழங்கினார்.
மேலும் 100 யூனிட்டுகளுக்கு அதிக மாக இரத்ததானம் செய்த மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் தனித்தனியாகக் கேடயங்கள் வழங்கப்பட்டன. வந்திருந்த அமைப்புக ளில் டிஎன்டிஜேயே அதிகமாக கேடயங்களை அள்ளிச் சென்றது.
வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி கிழக்கு, காஞ்சி மேற்கு மாவட்டங் கள் மற்றும் கிளை நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 46 கேட யங்களைப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வழங்கப்பட்டது.
நன்றி : TNTJ.NET
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment