ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Tuesday, November 2, 2010

பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்த முடியாது-இடித்தவர்கள் தண்டிப்பட்டாக வேண்டும்: சோனியா

அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை. எனவே மசூதியை இடித்தவர்களை தண்டித்தேயாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று ஒரு நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியா பேசினார்.

அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...

2010ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி காங்கிஸ் கட்சியின் நிலைக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று ஆணித்தரமாக கூறியிருந்தோம். பாபர் மசூதி இடிப்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை, அதை சரி என்று கூறவில்லை. இது ஒரு அவமானகரமான, குற்றவியல் நடவடிக்கை. இதில் சம்பந்தப்பட்டவகர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

தீர்ப்புக்கு முன்பு நாடு எந்த அளவுக்கு பதட்டமாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக் காத்தனர்.

அனைத்து வகையான மதவாதங்களையும் எதிர்த்து நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இனவாதம், மதவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அதை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற இந்தியாவைக் கட்டிக் காக்க அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்றார் சோனியா.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP