
அயோத்தி வழக்கில் நாளை வெளியாக இருந்த தீர்ப்பு ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் , அலகாபாத் ஐகோர்ட் வழங்கவிருந்த தீர்ப்புக்கு செப்டம்பர் 28ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை நம்ப முடியாது:
இதற்கிடையே, தீர்ப்புக்குப் பின்னர் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களை நம்ப முடியாது. இப்படித்தான் 1992ம் ஆண்டு அவர்கள் அளித்த வாக்குறுதியை நாடு நம்பியது. ஆனால் அப்போது நடந்த தவறுக்கு இன்று வரை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.
அதேபோல கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மதுக் கடைகளை மூடவும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
No comments:
Post a Comment