ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Wednesday, September 22, 2010

நாளை மறுநாள் தீர்ப்பு: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்று லக்னோ ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் (24-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் தரப்பினர் வன்முறையில் ஈடுபடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே நாடு முழுவதும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத் தப்பட்டுள்ளது. அயோத்தியில் மோசமான நிலைமை ஏற்படலாம் என கருதி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி நகரம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் வளை யத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இங்கு மத்திய போலீஸ் படையினரும், உத்தரபிரதேச போலீசாரும் கூட்டாக பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.


அயோத்தியில் மட்டும் 52 கம்பெனி மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிரடிப்படை பிரிவும் உள்ளது. சர்ச்சைக் குரிய இடத்தை சுற்றி அதிரடிப்படையினர் தயார் நிலையில் நிற்கின்றனர். உத்தரபிரதேசம் முழுவதும் நிலைமை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு மற்ற மாநிலங்களை விட கூடுதல் பாதுகாப்பு உள்ளது.


உத்தரபிரதேசத்தில் மட்டுமே 1 லட்சத்து 94 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 32 இடங்களில் பதட்டம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 4 இடங்கள் மிக மோசமான பகுதியாக கணித்து உள்ளனர். இந்த பகுதிகளில் அதிரடிப்படை யினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அனைத்து மாநில போலீசாரும் அதே போல பதட்டமான பகுதிகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு வழங்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் தவிர மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மோசமான நிலை ஏற்படலாம் என்று கருதுகின்றனர்.

எனவே அதிகபட்ச பாதுகாப்பு வழக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது. மக்களிடம் பதட்டம், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை டி.வி. நிறுவனங்கள் வெளியிடக் கூடாது. இது தொடர்பான கருத்து கணிப்புகளையும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP